PUBLISHED ON : டிச 09, 2011

மொரீஷியஸ் தீவு நெடுங்காலமாக மனிதன் கண்ணில் படாமல் இருந்தது. இதை உலகுக்கு அறிமுகப்படுத்தியது டோடோவும், ஸ்டாம்பும். 'டோடேர் என்பது மொரீஷியஸ் தீவுப் பறவை. சிறு இறகுகளைக் கொண்ட, பறப்பதற்கு வசதியற்ற, புறா போன்ற தோற்றம் கொண்ட இப்பறவையை கண்ட சிலர், அந்தப் பறவையைப் பற்றிய தெரிந்துக் கொள்ள மொரீஷியஸ் தீவிற்கு சென்றனர்.
முதல் முறையாக தபால் தலை (ஸ்டாம்பு) வெளியிட்ட நாடு மொரீஷியஸ்தான். அதாவது மொரீஷியஸ் பிரெஞ்ச் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில், தபால் தலை வெளியிடப் பட்டது. அயல்நாடுகளுக்கு, தபாலில் ஓட்டி அனுப்பட்ட ஸ்டாம்புகளை கண்ட பின்னர் பலருக்கு மொரீஷியஸ் என்ற தீவு இருப்பது தெரிய வந்தது. மொரீஷியஸ் சுமார் 100 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், அம்மக்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரெஞ்சு மணம் கமழ்கிறது. அந்நாட்டின் நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்றும் பிரெஞ்சு பேரரசனான நெப்போலியன் வகுத்தவையே. மொரீஷியஸ் தீவின் பிரதான துறை முகத்தின் பெயர் 'போர்ட் நெப்போலியன்' ஆகும். அங்கு குதிரை பந்தயம் தொடங்கும் போது, இன்றும் பிரெஞ்ச் தேசிய கீதம் இசைக்கப் படுகிறது. அங்குள்ள தெருக்களுக்கு நம்மூர் பெயர்களே உள்ளன. அங்கு தமிழர்கள் பலர் வசிக்கின்றனர்.
