
மதுரையிலுள்ள பள்ளியில் படித்து வருகிறேன். ஆண்டுவிழாவில் எனக்கு மயிலம்மா வேடமிட்டு மேடைக்கு அனுப்பினர். ஒத்திகையில் செய்தது போலவே மேடையில் நடித்து, வயர் லெஸ் மைக்கை கையில் பிடித்தபடி டயலாக் பேசினேன். திடீரென்று இடுப்பிலிருந்து, 'மயில்தோகைத் தொகுப்பு' கீழே நழுவி விழ ஆரம்பித்தது. வலது கையால் தாங்கிப் பிடித்தும் தடுக்க முடியவில்லை. நழுவி விழுந்தால் பார்வையாளர்கள் சிரிப்பர்.
நான் சமயோசிதமாக, இடது கையிலிருந்த மைக்கை கீழே வைத்து விட்டு, இரு கைகளாலும் மயிலிறகுத் தொகுப்பை பிடித்தபடி, உரத்த குரலில் பேச வேண்டிய டயலாக்கைப் பேசி முடித்துவிட்டு, திரைக்குப் பின்னால் சென்றேன். இரு கைகளும் வலித்ததால் என்னையறியாமல் கைகளை உதறினேன். தொபுக்கென தோகைத் தொகுப்பு காலடியில் விழுந்தது.
உள்ளே நின்ற வேடதாரி சிறுவர்-சிறுமியரும், மிஸ்களும் சிரித்து விட்டு, 'நன்றாக சமாளித்து விட்டாயே சம்யுக்தா' எனப் பாராட்டினர். எனக்கு ரொம்ப, 'ஹேப்பி'யா இருந்தது தெரியுமா?
- ஆர்.சம்யுக்தா, மேல அனுப்பானடி