PUBLISHED ON : ஏப் 03, 2021

இந்தியா முழுதும், 37 ஆயிரத்து 725 மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் நோயாளிகளுக்காக, 7.39 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. இது, 2018ல் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரம்.
மிகச் சிறந்த மருத்துவ கல்லுாரி டில்லியில் உள்ளது. இது, 'எய்ம்ஸ்' என்ற ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் கல்லுாரி. மும்பை, லீலாவதி மருத்துவமனை தான், இந்தியாவில் மிகப்பெரியது.
இந்தியாவில், 400 மருத்துவ கல்லுாரிகள் உள்ளதாக, 2017 புள்ளி விவரம் தெரிவிக்கிறது; அவற்றில், 53 கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்தியா முழுதும், 8 லட்சம் பேர் துடிப்புடன் மருத்துவத் தொழில் செய்து வருகின்றனர்.
அலோபதி தவிர, சித்த மருத்துவம், ஹோமியோபதியிலும் பட்டப்படிப்புகள் உள்ளன; அவற்றில் தேர்ச்சி அடைந்து, அந்தந்த துறைகளில் மருத்துவராக பலர் பணியாற்றுகின்றனர்.
அலோபதி மருத்துவ துறையில், 23 பிரிவுகள் உள்ளன; அதில், ரேடியாலஜிஸ்ட், ஆர்த்தோபெடிக் சர்ஜன், கார்டியாலஜிஸ்ட், அனஸ்தியஸ்ட் பிரிவு மருத்துவர்கள் அதிக வருமானம் பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், தனிப்பட்ட முறையில், மிக அதிக வருமானம், பொது மருத்துவர்களுக்கு தான்.
* மருத்துவர்கள், கி.பி., 1800ல் தான், வெள்ளை நிற கோட் அணிய ஆரம்பித்தனர்
* உடலில் ஆன்மா உள்ளதா என, மருத்துவர் டங்கன் மேக்டான் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். அந்த ஆய்வு வெற்றி பெறவில்லை
* மருத்துவரின் கையெழுத்து புரியம்படி இருக்க வேண்டும் என, 'டி.ஐ.எல்.,' என்ற சட்டப்பிரிவு இந்தியாவில் அமலில் உள்ளது. ஆனால், பின்பற்றப்படுகிறதா என தெரியவில்லை
* அமெரிக்காவில், மருத்துவர் கையெழுத்து புரியாமல், 7 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் தவறான மருந்தை சாப்பிட்டு இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
* முதல் மாற்று இதய அறுவை சிகிச்சை, டிச., 3, 1967ல் நடைப்பெற்றது; இதை வெற்றிகரமாக நிகழ்த்தியவர் டாக்டர் கிரிஸ்டிபன் பர்னார்ட்
* டி.என்.ஏ., கூறு பற்றி, 1953ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ஆய்வாளர்கள் கிரிக், ஜேம்ஸ் வாட்சன் இணைந்து இதை கண்டுபிடித்தனர்
* உலகில் பழைய மருத்துவ குறிப்புகள், 'சுஷ்கிதாசம்கிதா' என்ற இந்திய மருத்துவ தொகுப்பு நுாலில் உள்ளதாக கருதப்படுகிறது
* எகிப்தியர்கள் தான் முதன் முதலில், அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவ உலகம் கூறுகிறது.
பண்டைய தமிழகத்தில், இடையர், எயினர் என்ற பிரிவினர், மருத்துவத்தில் சிறந்து விளங்கியதாக, பழந்தமிழ் நுால்கள் கூறுகின்றன.
ஆயுர்வேத மருத்துவம், தக்காண பீடபூமி பகுதியில், செயல்பாட்டில் இருந்துள்ளது; இன்று, இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது.

