
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
பசும் பால் - 3 கப்
உப்பு, எண்ணெய், மிளகுப்பொடி - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரியை சுத்தம் செய்து, காய்ச்சிய பாலுடன் சேர்த்து, அரை பதத்தில் வேக வைக்கவும். அதை, வடைமாவு பதத்தில் அரைத்து, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து பிசையவும்.
மாவை வடைகளாக தட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான, 'பால் வடை' தயார். சத்து மிக்கது. சிற்றுண்டியாக பரிமாறலாம்!
- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.