தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி வானொலி எளிதாக துவங்கலாம்!

மினி வானொலி எளிதாக துவங்கலாம்!

மினி வானொலி எளிதாக துவங்கலாம்!


PUBLISHED ON : அக் 24, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊடக வகைகளில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளத்துடன் புதிதாக இணைந்துள்ளது, பாட்காஸ்டிங் என்ற ஒலிபரப்பு சேவை. வானொலி போன்று புகழ்பெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் சிறுவர், சிறுமியரும், 'பாட்காஸ்டிங்' வானொலி தொடங்கி புகழ் பெற்று வருகின்றனர்.

இந்த தொழில் நுட்பம், 2000ல் அறிமுகமானது. ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த டிரைஸ்டன் லுாயிஸ் உருவாக்கினார். அமெரிக்காவை சேர்ந்த டேவ் வைனர் மற்றும் ஆடம்கரி செயல் வடிவத்துக்கு கொண்டு வந்தனர்.

முதல் பாட்காஸ்டிங் ஒலிபரப்பு சேவையை, 2004ல் துவக்கினார் ஆடம்கரி. அதற்கு, 'டெய்லி சோர்ஸ் கோட்' என பெயர் சூட்டியிருந்தார்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் வெளிவரும், 'தி கார்டியன்' இதழில், 2004ல் இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினார், பென் ஹமர்சுஸ்லே. அதில், 'பாட்காஸ்டிங்' என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார்.

பிரபல ஆக்ஸ்போர்டு அகராதி, 2005ம் ஆண்டுக்கான புதிய ஆங்கிலச் சொல்லாக அதை இணைத்துக் கொண்டது. இணையம் வழி ஒலிபரப்புவதால், 'வலை ஒலிபரப்பு' என, தமிழாக்கியுள்ளது, பொது தகவல் தளமான விக்கிபீடியா.

அமெரிக்கா, வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரைகளை, பாட்காஸ்டிங் மூலம் ஒலிபரப்பி வந்தார், அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். இப்படித்தான் பிரபலமானது.

ஆங்கிலத்தில், 'புராட்காஸ்டிங்' என்ற சொல், அனைத்து வகை ஒலிபரப்பையும் குறிக்கும். ஒலிபரப்பும் நேரத்தில் மட்டும்தான் வானொலி நிகழ்ச்சியை கேட்க முடியும். ஆனால், 'பாட்காஸ்டிங்' சற்று மாறுபட்ட பொருளை தரும். ஒலிபரப்பும் நிகழ்ச்சியை, எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விவரம், அலைபேசிக்கே வந்துவிடும்.

பாட்காஸ்டிங் வானொலி துவங்க, தொழில்நுட்பத்தில் திறன் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. முகநுால், வலைப்பூ, வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள சேவைகளை பயன்படுத்துவோர், கட்டணமின்றி எளிதாக துவங்கலாம்.

ஆர்வம் இருந்தால், யார் வேண்டுமானாலும் வலை ஒலிபரப்பில் முன்னேற முடியும். ஆங்கர், ஸ்பார்டிபை, கூகுள் பாட்காஸ்ட், ஆப்பிள் பாட்காஸ்ட் போன்ற இணையதளங்கள், இது போன்ற மினி வானொலி நிலையம் துவங்க வாய்ப்பு தருகின்றன. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

நம் நாட்டில் மத்திய அரசின் ஒலிபரப்புக் கொள்கை மற்றும் விதிகளுக்கு உட்பட்டே, பாட்காஸ்டிங் நிகழ்ச்சி அமைந்திருக்க வேண்டும்.

- ஜெய்சக்திவேல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us