PUBLISHED ON : ஜூலை 15, 2011

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வெர் அமெரிக்க நாட்டில், 1864-ம் ஆண்டில் அடிமையாக இருந்த ஒரு தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அவர் ஓர் அடிமையாக பிறந்திருந்த போதிலும், உலகமே பாராட்டும்படி தன்னை ஒரு வேளாண்மை நிபுணராக உயர்த்திக் கொண்டார்.
அந்த காலத்தில் அடிமைகள் விலங்குகளைப் போன்று நடத்தப்பட்டு வந்தனர். கார்வெர் பிறந்த தினத்தை யாரும் குறித்து வைத்துக் கொள்ளவில்லை. அவர் பிறக்கும்போது அமெரிக்க உள் நாட்டுப்போர், முடியும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதைக் கொண்டு அவர் பிறந்த வருடம் 1864 என்று அனுமானிக்கப்பட்டது.
இவருடைய பெற்றோர் மிஸ்ஸோரி மாகாணத்தைச் சேர்ந்த டைமண்ட் க்ரூவ் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த ஓர் அமெரிக்க விவசாயியின் அடிமைகளாக இருந்து வந்தனர். இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே அடிமை வியாபாரிகள் இவருடைய தாயை கடத்திச் சென்று வேறு ஒருவருக்கு விற்று விட்டனர்.
அதற்கு பிறகு அவருடைய தாயைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. இவர் சிறுவனாக இருக்கும்போது இவருடைய தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார். அநாதையாக இருந்த இவரை கார்வெர் தம்பதிகள் வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டனர். இவர் அந்த வீட்டில் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இவரை வளர்த்து வந்த கார்வெர் என்பவரின் பெயரும் இவருடைய பெயருடன் இணைக்கப்பட்டது. இவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வெர் என்று அழைக்கப்பட்டார்.
இளம் வயதிலேயே கார்வெருக்கு மரம், செடி, கொடி போன்ற தாவர வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது வந்தது. இவர் உள்ளூரில் இருந்த வாசக சாலையில் கிடைக்கும் தாவர வகைகளைப் பற்றிய நூல்கள் அனைத்தையும் பலமுறை படித்து வந்தார்.
கார்வெர் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்பினார். ஆனால், இவர் வாழ்ந்து வந்த ஊரிலிருந்த பள்ளியில் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த குழந்தைகளை சேர்த்துக் கொள்ளவில்லை. இவரை வளர்த்து வந்த அந்த வயோதிகத் தம்பதிகளிடம் இவரை தொலைவில் இருந்த வேறு பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கத் தேவையான பொருளாதார வசதி இல்லாமலிருந்தது.
கார்வெருக்கு தென்மேற்கு மிஸ்ஸோரியில் இருந்த நியூடன் கவுண்டி என்ற பள்ளியில் இடம் கிடைத்தபோது, அந்த வயோதிகத் தம்பதிகள், ''உனக்கு படிப்பில் ஆர்வம் இருக்கிறது. உனக்கு பள்ளியில் இடம் கிடைத்திருக்கிறது. பள்ளியில் சேர்ந்து படிக்கும் உன் ஆசையை நிறைவேற்றிக் கொள். ஆனால், உனக்கு பணம் கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. எங்கேயாவது வேலை செய்து, உனக்குத் தேவையான பணத்தை சேர்த்து படி!'' என்று கூறி கார்வெரை அனுப்பி வைத்தனர்.
பள்ளியில் சேர்ந்து படிக்க கார்வெர் புறப்பட்டபோது அவரிடம் சிறிது கூட பணம் இல்லை. பயணம் செய்யும் போது வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவை மட்டும் எடுத்துச் சென்றார். கார்வெர் தன் பள்ளிக்கு அருகில் இருந்த விவசாயப் பண்ணையில் கூலி வேலை செய்து, தனக்கு தேவையான பணத்தை சம்பாதித்து வந்தார். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து தன் பள்ளிப் பாடங்களை படித்து, பள்ளி இறுதிப் பரீட்சையில் நிறைய மதிப்பெண்களைப் பெற்று பள்ளிப் படிப்பை முடித்தார்.
கார்வெர் தொடர்ந்து கல்லூரிப் படிப்பை படிக்க விரும்பினார். ஆனால், அவர் வாழ்ந்து வந்த ஊரிலிருந்த கல்லூரிகளில் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், கார்வெர் கல்லூரியில் சேர்ந்து படிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தார். சில வருடங்களுக்குப் பிறகு அயோவா மாகாணத்தின் அலபாமா என்னும் ஊரில் இருந்த, ஸிம்ப்ஸன் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது.
அவர் 1867-ம் ஆண்டில் அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தார். கார்வெர்தான் அந்தக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நீக்ரோ இனத்தைச் சேர்ந்த முதல் மாணவராக இருந்தார். அந்தக் கல்லூரியின் வேளாண்மைப் பிரிவில் ஆ.கு., M.கு., ஈ.குஞி., கட.ஈ., போன்ற படிப்புகளை படித்து முடித்தார்.
அவர் படித்த வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் கார்வெருக்கு பேராசிரியர் பதவியைக் கொடுக்க முன் வந்தார். ஆனால், கார்வெர் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள விரும்பினார். அவர் அதே கல்லூரியில் ஆராய்ச்சிப் பிரிவில் சேர்ந்து, பயிர்களை அழித்து வரும் பூச்சிகளைப் பற்றியும், அவற்றைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பற்றியும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மேலும் விவசாயப் பண்ணையில் இருந்து வரும் கால்நடைகளைத் தாக்கி வரும் வியாதிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது நீக்ரோ இன விவசாயிகளுக்கு உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்க புக்கர் டி.வாஷிங்டன் என்பவர் டுஷ்ஷெகி பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். நீக்ரோ இன மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கார்வெரை அந்தப் பாடசாலையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
கார்வெர் இந்தப் பணியை ஏற்றார்?
(- தொடரும்)
