PUBLISHED ON : பிப் 21, 2014

*கிரீட் தீவை ஆதாரமாக கொண்டு மினோயனிய மக்கள் முதன்மையான மெடிட்டெரேனிய நாகரிங்களில் ஒன்றினை உருவாக்கினர். அதற்கு உதவியாக இருந்தது வெண்கல காலகட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தொன்மையான எகிப்து உட்பட அதற்கு இருந்த வர்த்தக தொடர்புகள் ஆகியவையாகும். அந்த நாகரிகம் கி.மு.3000 முதல் கி.மு.1450 வரை வளமை பெற்றது.
*பிரதான நிலப்பகுதி கிரேக்க நாகரிகங்களில் முதன்மையானது மைசெனயியன் நாகரிகமாகும். அவர்களின் பலமான நகரங்கள் அப்பிரதேசத்தை ஆளுமைப்படுத்தியது. கி.மு.1600ம் கால கட்டத்தில் மினோயனிய நாகரிகம் மங்க தொடங்கியது.
*மைசெனயியன் ஆட்சியால் 4 நூற்றாண்டுகள் அழிவு பெற்று இருந்தாலும் தொன்மையான கிரேக்கம் மினோயனிய வழியிலும் மைசெனயின நாகரிக வழியிலும் கட்டப்பட்டது.
ராஜா மானாஸின் அரண்மனை: நாஸஸின் அரண்மனையை பிரிட்டனின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்தர் இவன்ஸ் 1900ம் ஆண்டில் தோண்டி எடுப்பதில் ஈடுபட்டார். இந்த அரண்மனை ஒரு காலத்தில் மினோயனியத்திற்கு சொந்தமாய் இருந்திருக்கலாம் என கருதப் படுகிறது. இந்த இடத்தில் கி.மு.1900- 1750 காலத்தில் முதல் அரண்மனை கட்டப்பட்டது. பின்னர், 'புதிய அரண்மனை' கி.மு.1600ம் ஆண்டிற்கு பிறகு 200 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது. இந்த அரண்மனை தட்டையான கூரையுடன் கூடிய 1300 அறைகள் கொண்டு இருந்தன. இதனை சுற்றிய டவுனில் 10ஆயிரம் மக்கள் வசித்தனர்.
மினோயின கலை!: நாஸஸ் அரண்மனை மற்றும் பிற மினோயின அரண்மனைகள் அற்புதமான சுவர் ஓவியங்களை கொண்டு இருந்தன. அதோடு அலங்கார வேலைபாடு களும் சுவர்களை நிறைத்தன. ஓவிய காட்சிகள் மனித மற்றும் விலங்கின உருவங்களை கொண்டு இருந்தன. விலங்குகளில் எருதுகள் மற்றும் டால்பின்கள் இருந்தன. சமமாக வண்ணம் பிரத்யேகமான ஸ்டைலுடன் பூசப்பட்டு இருந்தது. இந்த ஓவியங்கள் அரசர்களையோ, கடவுள் தன்மையையோ பிரதிபலிக்காததால் எகிப்து அல்லது மெஸபடோமிய கலைக்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத தனித்தன்மையை பெற்றுள்ளது. சான்டோரினி சுவர் ஓவியம் பறவைகள் நிறைந்த நிலப்பகுதியை காட்டுகிறது. இதுதான் உலகின் முதன்மையான தூய்மையான நிலப்பகுதி.
ஆக்டோபஸ் வளைவு: பெரும்பாலான மினோயின பானைகள், விலங்குகள் அல்லது தாவர ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டன. அதோடு மினோயனிய பானை செய்யும் கலை அவர்களின் பெண் கடவுள் என கருதப்படும் பெண் உருவம், பாம்புகள் சூழ இருப்பது போல செய்தது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது.
மினோயினர்கள், மைசெனயினர்களின் காலக்கோடு:
கி.மு.6000 - கிரீட் தீவில் விவசாயம் ஆரம்பமானது.
கி.மு.3000 - கிரேக்கத்தின் வெண்கல காலகட்டம் தொடங்கியது. மினோயின நாகரிகம் கிரீட்டில் செழுமை பெற்றது.
கி.மு.1900 - நாஸிஸ்ஸில் முதல் அரண்மனை கட்டப்பட்டது.
கி.மு.1600 - சான்டோரினியத்தின் எரிமலை வெடிப்பு மினோயியத்துடன் தொடர்பு உடைய நகரங்களை அழித்தது.
கி.மு.1500 - மைசெனயினர்கள் நாஸஸின் மீது கட்டுப்பாடு கொண்டதால் மினோயின நாகரிகம் அழிவு பெற தொடங்கியது.
கி.மு.1250 - டிராய் மைசெனயினர்களால் (கிரேக்கர்களால்) அழிக்கப்பட்டது.
கி.மு.1100 - மைசெனயின நாகரிகமும் முடிவுக்கு வந்தது.
நாஸஸ் அரண்மனை: இந்த பிரம்மாண்டமான கட்டடம் மினோயின அழிவின் மிச்சம். இந்த கிரீட் தீவு கட்டடத்தை தோண்டி எடுக்க 30 ஆண்டுகள் ஆயின.
கிரேக்க மூதாதையர்கள்!: கி.மு.2000ம் காலகட்டத்தில் முதலில் வெளிப்பட்டவர்கள், மைசெனயினர்கள். அவர்கள் பெயர் பெற்றது பழமையான நகரமான மைசெனயின் பெயரி லிருந்துதான். அவர்கள் பைலாஸ், அர்ஜோஸ், தீபஸ் மற்றும் ஏதென்ஸ் நகரங்களோடு சம்பந்தப்பட்டு இருந்தனர். மைசெனயினர்கள் வெண்கலத்தை உருவாக்கி மினோயனிய பிரதேசம் உட்பட சுற்றி யுள்ள பிரதேசங்கள் முழுமைக்கும் வியாபாரம் செய்தனர்.
கி.மு.1500ம் கால கட்டத்தில் அவர்கள் நாஸஸை கைபற்றியதாக தெரிகிறது. அதன் பிறகு மினோயின பாணி அரண்மனைகள் பிரதான நிலப்பகுதியிலும் தோன்ற லாயின. 1870ம் ஆண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் மைசெனயின வலிமை யான கட்டடங்கள் மற்றும் விரிவான ஸ்தூபிகளை எடுத்து காட்டின.
ஆளும் அரசர்கள் புதைக்கப்படும்போது ஏராள மதிப்புடனான தங்க பொருள்களுடன் புதைக்கப் பட்டனர். இந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் தொன்மை யான கிரேக்க புராண கதையாக கருதப்பட்டவை உண்மைகளே என நிரூபித்தது.
சிங்க வாயில்: மினோயினர்கள் போல் அல்லாமல், மைசெனயினர்களின் நகரங்கள் போர் சார்ந்த வாயில்களை கொண்டிருந்தன.
மினோடார்!: கிரேக்க புராண கதையின்படி மினாஸ் அரசன் எருது-தலை மற்றும் மனித-உடல் கொண்ட ராட்சத உருவத்தினை தனது அரண்மனையின் அடியில் மறைவாக புதைத்து வைத்து இருந்தாராம். அந்த ராட்சத உருவை மினோடார் என்பர் ஆங்கிலத்தில். கிரேக்க மாவீரன் தீஸஸ்ஸால் அது பின் அழிக்கப் பட்டது. இந்த புராண கதையில் கொஞ்சம் உண்மை யும் உண்டு. எருதுகள் மினோயினர்களுக்கு புனித விலங்காகும். அதனால், எருதினை போற்றும் வகை யில் விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அவை தெளிவாக நாஸஸில் காணப்படும் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன.
