தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மின்ஸ்டோரி! கோபம்!

மின்ஸ்டோரி! கோபம்!

மின்ஸ்டோரி! கோபம்!


PUBLISHED ON : நவ 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் சூரியன் தனது அவசரத் தேவைக்காகப் பருந்திடம் பணம் கடன் வாங்கியது. பருந்து நடு மத்தியானம் சூரியனிடம், ''என் கடனைத் திருப்பிக் கொடு,'' என்று நச்சரித்தது.

''அதிகாலையில் நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்கிச் செல்,'' என்று சூரியன் சொல்லிச் சமாளித்தது. அத்தனை அதிகாலை நேரத்தில் பருந்து எழுந்து வராது என்ற தைரியம் சூரியனுக்கு.

ஆனால், அதற்கு ஒரு விரோதி இருப்பது பிறகுதான் தெரிய வந்தது. சேவல் அதிகாலையில் பருந்தின் அருகே சென்று 'கொக்கரக்கோ' என்று எழுப்பி, 'சூரியன் வீட்டுக்குச் செல், உனக்குக் காõரியம் கைகூடும்' என்றது.

பருந்து அதிகாலையில் சூரியன் வீட்டுக் கதவைத் தட்டிய போது, சூரியன் தூக்கக் கலக்கத்தில் விழித்து வந்து, 'யாரங்கே' என்று கத்தியது.

''நான்தான் பருந்து... கடனை வசூலிக்க வந்திருக் கிறேன்,'' என்றது பருந்து.

''யார் உன்னை அதிகாலையில் எழுப்பியது,'' என்று கோபத்துடன் கேட்டது சூரியன்.

''எனக்கு சேவல்தான் உதவி செய்து எழுப்பி அனுப்பியது'' என்றது பருந்து.

சூரியனுக்குச் சேவல் மேல் ஏகக் கோபம்.

''ஏன் தூக்கத்தைக் கெடுத்த சேவலுக்கு அதற்குத் தண்டனை 'பருந்தே! சேவல் பெற்றுத் தரும் குஞ்சுகள் உனக்கு உணவாகட்டும்,'' என்று சபித்து விட்டு, கடனையும் அடைத்தது சூரியன்.

என்றுமே உதவி செய்தவர்களைக் காட்டிக் கொடுத்து விடக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us