தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காற்றில் இருந்து காசு வருது!

காற்றில் இருந்து காசு வருது!

காற்றில் இருந்து காசு வருது!


PUBLISHED ON : பிப் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காற்றில் இருந்து காசை வரவழைக்கும் மேஜிக்கான இது எளிமையானதும் கூட. இதற்காக அதிகம் செலவு செய்யவும் தேவையில்லை.

ஒரு கண்ணாடி கிளாஸை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே ஒன்றும் இல்லை என்பதைப் பார்வையாளர்களிடம் காட்டி அவர்கள் திருப்தியைப் பெறுங்கள். பார்வையாளர்கள் கண்ணாடி கிளாஸின் உள்ளே ஒன்றுமில்லை என்பதைப் பார்த்து உறுதி செய்வார்கள். அடுத்து கிளாஸை இடது கையில் பிடித்துக் கொள்ளுங்கள். வலது கையை நன்றாக விரித்து உங்கள் கையில் ஒன்றுமில்லை என்று காட்டி விட வேண்டும்.

அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, சட்டென்று வலது கையை காற்றில் வீசி இல்லாத காசைப் பிடிப்பது போல பாவனை செய்யுங்கள். பார்வையாளர்களைப் பார்த்து, 'காற்றில் நான் காசைப் பிடித்ததைப் பார்த்தீர்களா?' என்று கேட்க வேண்டும். அவர்கள் நிச்சயம் இல்லை என்று சொல்வார்கள். காற்றில் எப்படி காசு இருக்கும்?

இப்போது காற்றில் நீங்கள் பிடித்த காசை அந்தக் கிளாஸிற்குள் போடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யும் போது, பார்வையாளர்களால் நிஜமாகவே ஒரு காசு அந்தக் கிளாஸிற்குள் விழும் ஓசையைக் கேட்க முடியும். கூடவே காசையும் பார்க்க முடியும். இப்போது நீங்கள் இன்னொரு முறை வலது கையை காற்றில் வீசி, காசைப் பிடித்து கிளாஸில் போடுங்கள். இப்போது அந்தக் கிளாஸிற்குள் இரண்டு காசுகள் இருக்கும். அதை நீங்கள் பார்வையாளர்களிடம் கொடுத்து பரிசோதிக்கச் சொல்லலாம். அவர்களுக்கு அது அதிசயம். ஆனால், அது உங்களிடம் உள்ள மேஜிக் திறமை.

சரி இந்த மேஜிக்கை எப்படிச் செய்வது என்று கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறதா? தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மேஜிக்கைச் செய்ய இரண்டு காசுகளும், ஒரு கண்ணாடி கிளாஸும் தேவை. அவற்றைத் தயார் செய்து கொள்ளுங்கள். கிளாஸை பிடிக்கும்போது, இரண்டு விரல்கள் கிளாஸிற்கு உள்ளே இருக்குமாறும், பெருவிரல் கிளாஸிற்கு வெளியே இருக்குமாறும் பிடித்துக் கொள்ள வேண்டியது அவசியம். கிளாஸிற்கு உள்ளே இருக்கும் இரண்டு விரல்களுக்கு அடியில் இரண்டு காசுகளை மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது தான் இந்த மேஜிக்கின் முக்கியமான சூட்சமம்.

நீங்கள் வலது கையை காற்றில் வீசி காசைப் பிடித்து கிளாஸிற்குள் போடுவதைப் போல நடிக்கும்போது, கிளாஸிற்குள் இருக்கும் விரல்களுக்கு அடியில் உள்ள காசுகளில் ஒன்றைக் கிளாஸிற்குள் நழுவ விடுங்கள். கிளாஸிற்குள் திடீரென்று வந்து விட்ட காசைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, அடுத்த காசை காற்றில் பிடித்து கிளாஸிற்குள் போடுங்கள். (முதல் காசுக்கு செய்தது போலவே) இப்போது நீங்கள் அந்த கிளாஸைப் பார்வையாளர்களிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லலாம்.

இந்த மேஜிக்கைச் செய்யும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்.

* காசுகளைப் போதிய நேரம் எடுத்து விரல்களுக்குக் கீழ் கவனமாக மறைத்து வைக்க வேண்டும்.

* கிளாஸைப் பிடித்திருக்கும் இடது கையை ரிலாக்ஸாக வைத்திருப்பதோடு, ஓரிடத்தில் நில்லாமல் நகர்த்திக் கோண்டே இருங்கள்.

* கிளாஸைப் பார்வையாளர்களுக்குக் காட்டும்போது அவர்களின் கவனம் கிளாஸின் அடிப்பாகத்தில் இருக்குமாறு செய்ய வேண்டும்.

ஒருமுறைக்குப் பலமுறை சிரத்தையோடு பயற்சி எடுங்கள். அதன் பிறகு நீங்கள் இந்த மேஜிக்கை செய்து மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us