
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
முருங்கைப் பூ - 1 கப்
பால் - 2 கப்
வெல்லம் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பசும் பாலை கொதிக்க விடவும். அதில், சுத்தம் செய்த முருங்கைப்பூவை போட்டு, மிதமான சூட்டில் சுண்டக் காய்ச்சவும். அதனுடன், வெல்லம் சேர்க்கவும். இரும்புச்சத்து மிகுந்த, 'முருங்கைப்பூ பால்' தயார்.
இதமான சூட்டில் பரிமாறலாம். மிகச் சுவையாக இருக்கும். கண் பார்வை திறனை கூட்டும். சிறுவர், சிறுமியர் விரும்பி பருகுவர்.
-கே.லலித் மஞ்சு, துாத்துக்குடி.

