
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புயலில், தென்னை மரங்கள் எளிதில் விழுவதில்லை. அதற்கு காரணம், அவற்றின் திசுக்களின் அமைப்பு தான்.
தென்னை மரத்தில் வெளிப்பகுதி, கனமாகவும், உட்பகுதி பஞ்சு மாதிரியும் இருக்கும். அது, ஓரளவு வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றிருக்கும். காற்று வீசும் போது, இணக்கமாக ஈடு கொடுத்து, மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும்.
பனை போன்ற தாவரங்கள், புல்லினத்தை சேர்ந்தவை. அதன் திசுக்கள் மாறுபட்டுள்ளன.
வளரும் சூழலுக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்கின்றன. மாறுபட்ட சூழலில் வளரும் போது, திறனை இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அது போன்ற நேரத்தில் தான், காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்து விடும் நிலை ஏற்படுகிறது.
புயலடித்தால், தென்னை விழாது; ஆனால், இளநீர் விழும்.

