PUBLISHED ON : நவ 14, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை - 1 கட்டு
மிளகாய் வற்றல் - 10
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
பூண்டு பல் - 15
எண்ணெய், புளி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முருங்கை கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து நிழலில் உலர்த்தவும். எண்ணெயை சூடாக்கி, மிளகாய் வற்றல், உளுந்தம்பருப்பு, மிளகு, கொத்துமல்லி, பூண்டு பல் போட்டு சிவக்க வறுக்கவும். ஆறியபின் நன்றாக அரைக்கவும். அத்துடன் உலர்ந்த முருங்கை கீரை, உப்பு, புளி சேர்த்து, கொரகொரப்பாக பொடிக்கவும்.
சுவைமிக்க, 'முருங்கை கீரைப்பொடி' தயார். சூடான சாதத்தில் நெய்யுடன் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். சிறுவர், சிறுமியர் மிகவும் விரும்புவர். சத்துக்கள் நிறைந்தது.
- என்.ரத்னா, சென்னை.
தொடர்புக்கு: 95660 12848
