தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (68)

இளஸ் மனஸ்! (68)

இளஸ் மனஸ்! (68)


PUBLISHED ON : நவ 14, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டிக்கு...

நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி; எந்த விஷயத்தையும், நல்ல மனநிலையோடு பார்க்க முடியவில்லை; நம்பிக்கை இல்லாமல் பார்க்கிறேன். அதற்கு காரணம், என் பெற்றோர் மற்றும் தம்பி.

அம்மாவிற்கு எல்லாவற்றிலும் பயம்; அப்பாவிற்கு, அனைத்தும் முறையாக நடக்க வேண்டும். இதனால் வீட்டில் பிரச்னை. வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பதில்லை அப்பா.

அதனால் மனம் சோர்ந்திருந்த அம்மாவுக்கு வீட்டிலிருந்து, மொபைல் போன் மூலம் தொழில் செய்து பணம் ஈட்டலாம் என்ற ஆலோசனை கூறினேன். அதற்கு வசதியாக ஒரு மொபைல் செயலி பற்றி எடுத்துரைத்தேன்.

'அதெல்லாம் வேண்டாம்...' என பயந்த அம்மா, இதுபற்றி அக்காவிடம் கூறி விட்டார். அவர், எரிகிற தீயில் பெட்ரோலை உற்றும் வகையில், மொபைல் போன் செயலியின் கெட்ட விளைவுகளை எடுத்து கூறிவிட்டார்.

மிகவும் பயந்து போன அம்மா கடுமையாக திட்டினார். பின், என்னை கண்காணிக்க, என் தம்பியிடம் கூறினார். அதற்காக, இரண்டு ஆண்டுகளாக அயராது உழைத்து கொண்டிருக்கிறான் தம்பி.

கொடுமையான விஷயம் என்னவென்றால், இதேபோல் ஒரு பிரச்னையால் என் அம்மாவுடன் இரண்டு மாதங்களாக பேசவில்லை. ஊரடங்கு துவங்கிய பின்தான், அம்மாவுடன் தோழியாக மாறினேன். ஆனால், மறுபடியும் பேசாமல் இருக்கிறேன்.

இதில், என் மீது தப்பா... இல்லை அம்மா மீது தப்பா... சமூக வலை தளங்களை உபயோகிப்பது நல்லதா... கேட்டதா... என ஆலோசனை கூறுங்கள் ஆன்டி.

அன்பு மகளுக்கு...

இந்தியாவில், 1.3 லட்சம் அலைபேசி செயலிகள் உள்ளன; பெரும்பாலானவை பொழுதுபோக்கத்தான் உதவும்.

ஊரடங்கு நேரத்தில் பொழுதுபோக்க, கீழ்க்கண்ட செயலிகள் பயன்படும்.

* ரெசிபி புக்: உலகின் எல்லா வகை சமையல் குறிப்புகளும் இதில் உள்ளன

* டவுன்டே: யோகா பயிற்சிக் கற்று தருகிறது

* இன்சைட் டைமர்: தியானம் சொல்லித் தருகிறது

* வாட் பேட்: முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கலாம்.

பணம் சம்பாதிக்கவும், பரிசு கூப்பன்கள் பெறவும் கீழ்க்கண்ட செயலிகள் உதவும்!

* ஐ போல்: குறிப்பிட்ட பொருளை பற்றி சர்வே செய்து பணம் பெறலாம்

* கூகுள் ஒப்பினியன் ரிவார்ட்ஸ்: சர்வே மூலம் பணம் சம்பாதிக்கலாம்

* ஸ்வாக் பக்ஸ்: விளம்பரத்தை பார்த்து பணம் சம்பாதிக்கலாம்

* மொபி: சர்வே செய்து சம்பாதிக்கலாம்

* டாஸ்க் ராபிட்: ஒரு பணியை ஊதியம் நிர்ணயித்து செய்யலாம்

* உபெர்: வாகனம் ஓட்டும் உரிமம் வைத்திருந்தால் பகுதி நேரம் கார் ஓட்டி சம்பாதிக்கலாம்

* லிட்ப்: வார இறுதி நாட்களில் கார் ஓட்டி சம்பாதிக்கலாம்

* சர்வே ஜங்கி: விற்பனை பொருட்களை பற்றி அபிப்ராயம் கூறி பணம் சம்பாதிக்கலாம்.

இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய, திறன்மிக்க அலைபேசி இருக்க வேண்டும். இயக்க போதிய அறிவும் வேண்டும்.

அரசு தடை செய்த செயலிகளை தான் பதிவிறக்கம் செய்ய கூடாது. ஒரு சில செயலிகள் தவிர, மற்றவற்றில் பெரிதாக பணப்பயன் கிடைக்காது.

உன் தாய், தம்பியிடம் மனம் விட்டு பேசு.

அலைபேசி செயலிகள் விஞ்ஞானத்தின் பரிசுகள்; அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால், எந்த ஆபத்தும் வராது என்பதை எடுத்துச் சொல்.

வீட்டில் தையல் இயந்திரம் இருந்தால், முக கவசம் தயார் செய்து விற்பனை செய்யலாம். சுவையான உணவு தயாரித்தும் விற்பனை செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்.

பிளம்பர், கார்பென்டர், எலக்ட்டிரிஷியன் பணிகள் தம்பிக்கு தெரிந்தால் செய்ய சொல். அவற்றின் மூலம் வருமானத்தை பெருக்கலாம்; வளமாக வாழலாம்.

- நெஞ்சம் நிறைய அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us