PUBLISHED ON : மார் 17, 2017

டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.
கோஸ் ஆனியன் சட்னி!
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
கோஸ் துருவல் - 1 கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறு துண்டு
தக்காளி - 1
செய்முறை: கொடுக்கப்பட்ட பொருட்களை, வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி வதக்கவும். ஆறியவுடன் அனைத்தையும் அரைத்து, தாளிதம் செய்தால், கோஸ் சட்னி ரெடி.
இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும். கோஸ் பிடிக்காத குட்டீஸ்களும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவர். கோஸ் சட்னி தான், என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
இந்த கோஸ் சட்னி ஆரோக்கியம் நிறைந்தது. வாயு தொல்லை உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிடலாம். கேன்சரை உண்டாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி, கோசுக்கு உள்ளது.
- எஸ்.ராணி சுரேஷ், கடலூர்.
