
'முர்ரே' எனப்படும் 'ஸீ பேர்டு' 'ஆக்' குடும் பத்தைச் சார்ந்தது. இவை வட பசிபிக் மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதியின் அருகிலுள்ள உயர்ந்த பாறைகளில் வசிக்கின்றன. இந்தப் பாறை முகடுகள் மிகவும் உயரமாக இருக்கும். முட்டையிடும் காலம் வரும்போது பெரிய பாறைகளின் மீது ஒரு முட்டையை இட்டு விட்டுச் சென்றுவிடும் பெண் பறவை. அந்த முட்டையின் வடிவம் வித்தியாசமாக இருப் பதால், அது பாறையி லிருந்து உருண்டு கீழே விழாது.
மூன்று வாரங் களுக்குப் பின் குஞ்சுகள் வெளியே வரும். இவற்றால் பறக்க முடியாது. மிகவும் வீக்காக இருக்கும். தாய்ப்பறவை அருகிலிருந்து தேவையான மீன்களை உண்ணக் கொடுத்தால்தானே சத்து இருக்கும். இலையுதிர் காலத்தின் போது தந்தைப் பறவைகள் இரவில் கடலில் இருந்தபடியே மிகவும் கவலையான குரலில் ஒலி எழுப்பும்.
இந்தக் குரலைக் கேட்கும் குஞ்சுகள் அவற்றின் ஒலியால் குரல் கொடுத்தபடியே கூட்டை விட்டு ஓடிவந்து மலை முகட்டில் இருந்து கீழே குதிக்கும். இதன் உயரம் ஏறக்குறைய 500 மீட்டர் இருக்கும். சில குஞ்சுகள் அதிர்ஷ்டவசமாக தண்ணீரில் விழும். மற்றவை தரையில் விழுந்தாலும் அடிபடாமல் தப்பித்துக் கொள்ளும். கடலில் விழுந்த குஞ்சுகள் தங்கள் தந்தைப் பறவைகளுடன் நீந்தி கரைக்கு வந்து முழு வளர்ச்சி அடையும் வரையில் அவைகளுடன் இருக்கும். இரண்டு மாதங்களில் முழுவளர்ச்சி பெற்றதும் தனியே சென்றுவிடும்.

