PUBLISHED ON : மே 23, 2014

நெப்போலியனுடைய மனைவி ஜோசப்பின் செய்து வந்த ஆடம்பரச் செலவுகள் நெப்போலியனுக்கு நிறைய தலைவலியைக் கொடுத்து வந்தன.
ஒருமுறை அரசி நிறைய விலையுயர்ந்த துணி களை வாங்கி வந்து அவைகளுக்கான விலையைக் கடைக்காரனுக்கு கொடுக்கும்படி நெப்போலிய னிடம் கேட்டுக் கொண்டாள். ஆனால், நெப்போலியன் அந்தத் துணிகளுக்கான பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
அரசி போர்களுக்கான செலவுகளைக் கவனித்து வரும் யுத்த மந்திரியிடம் சென்று அந்தத் துணி களுக்கான பணத்தைப் போர்ச் செலவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையிலிருந்து கொடுக்கும்படிக் கூறினார்.
அரசியைப் பகைத்துக் கொண்டால் தன்னால் தொடர்ந்து மந்திரியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்த மந்திரி உடனடியாக கடைக்காரனுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டார்.
ஒரு மாபெரும் கண்டத்தையே ஆண்டு வந்த நெப்போலியனால் தன் மனைவி ஜோசப்பினை சிறிது கூடக் கட்டுப் படுத்த முடியவில்லை.
'பெரிய நாட்டை நன்கு ஆண்டு வரும் என் திறமையையும், சக்தியையும் நிறைய பேர்கள் புகழ்ந்து கூறி வருகின்றனர். ஆனால், நான் என் குடும்பத்தைப் பொருத்த வரையில் மிகவும் பலவீனமானவன்தான். இது என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும். அவர்கள் அவர்களுடைய விருப்பப்படி என்னை நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்' என்று வருத்தத்துடன் கூறினார் நெப்போலியன்.
இதுதான் ஒரு மனிதனின் உண்மையான நிலை.
