தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சொர்க்கம் வேணாம்

சொர்க்கம் வேணாம்

சொர்க்கம் வேணாம்


PUBLISHED ON : பிப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு கிராமத்து தேவாலயத்தில் பாதிரியார் சொர்க்கத்துக்கு செல்வது பற்றிச் சிறப்பாக போதித்தார். அவர் பேசி முடிந்ததும், 'யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்க, ஒட்டுமொத்தக் கூட்டமும் கை தூக்கியது.

ஆனால், ஓர் ஏழைச் சிறுவன் மட்டும் கையைத் தூக்கவில்லை. அந்தப் பாதிரியார் அவனிடம் வந்து, 'தம்பி சொர்க்கம் வேண்டாமா? அப்படியானால் நரகம் செல்கிறாயா?' என்று கேட்டார்.

''பாதர் நான் சொர்க்கத்தையும், நகரத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன்'' என்றான்.

''உனக்கு இந்த சிறு வயதில் பதவி மோகமா? கடவுளை விட அதிகாரம் முக்கியமா?'' என்று கேட்டார் பாதர்.

''பாதர் இங்கே கறுப்பு இன மக்களை நாயை விட கேவலமாக சங்கிலியால் கட்டிப் போட்டு பலர் கொடுமை செய்கின்றனர். இந்த அதிகாரத்தை தட்டிக் கேட்டு, அம்மக்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம்தான் சரியாக இருக்கும்'' என்று சொன்னதோடு அதைச் சாதித்தும் காட்டியவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

தெளிவான சிந்தனை, குறிக்கோள் இருந்தால், நீங்கள் எதையும் சாதிக்கலாம் குட்டீஸ்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us