PUBLISHED ON : பிப் 05, 2016
அ நிறம் | அளவு
எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கருகில் அமைந்துள்ள 'பாரோஸ்' என்ற தீவில், சுமார் 500 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டது இந்த கலங்கரை விளக்கம். இது மிக உயரமாக வும், அதிக பிரகாசமாகவும் அமைந்திருந்த தால், வெகு தொலைவில் பயணிக்கும் கப்பல்களுக்கு இது வழிகாட்டியாக விளங்கியது. இந்த விந்தையான அதிசயத் தின் ஆயுட்காலம் 1500 ஆண்டுகள் நீடித் திருந்தது. சுமார் 380-440 அடி உயரமுள்ள இந்தப் பழமையான அலெக்ஸாண்டிரியா கலங்கரை விளக்கம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டடம் என்பதைச் சரித்திரம் பெருமையாகச் சொல்கிறது.
