தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சட்டை இல்ல சார்...

சட்டை இல்ல சார்...

சட்டை இல்ல சார்...


PUBLISHED ON : ஏப் 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 56; சிவகங்கை, இடைக்காட்டூர், ஆர்.சி., துவக்கப் பள்ளியில், 1969ல் மூன்றாம் வகுப்பு படித்த போது, அம்மை போட்டிருந்தது. மூன்று தண்ணீர் ஊற்றி முடிந்த பின், பள்ளிக்கு சென்றேன்.

நான், 11வது பிள்ளை. குடும்பம் வறுமையில் இருந்தாலும், 11 பேரையும், படிக்க வைத்தனர் பெற்றோர். பள்ளிக்கு செல்லும் போது, டவுசர் மட்டும் தான் போட்டு செல்வேன்; அதில், பட்டன் இருக்காது; இழுத்து முடிச்சு போட்டிருப்பேன். மேல் சட்டையும் இல்லை; உடைந்த சிலேட்டை, 'சூட்கேஸ்' போல் பிடித்து போவேன்.

அன்று பள்ளி ஆய்வாளர் வந்திருந்தார்.

என் வகுப்பிற்கு வந்தவர், 'ஏன் சட்ட போடம வந்திருக்க...' என்றார்.

'சட்ட இல்லைய்யா...' என்றேன். உடனே, ஆசிரியர்களை பார்த்து, 'உங்களுக்கு இரக்க குணமே இல்லையா... ஏன் இப்படி, கல் நெஞ்சாக இருக்கிறீர்...' என்று திட்டி, 100 ரூபாயை, என்னிடம் கொடுத்து, 'இரண்டு செட் டவுசர் சட்டை வாங்கிக் கொள்...' என்று கூறி, மற்றொரு பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்று விட்டார்.

அவர், சென்ற உடனே, தலைமையாசிரியர் என்னை அழைத்து, 'பள்ளி ஆய்வாளர் வருகிறார் என்று, என் சொந்த பணத்தை செலவழித்து, பள்ளிக் கூடத்தை அழகுபடுத்தினேன். இப்படி, எனக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்து விட்டாயே... 'ஆசிரியர்களுக்கு இரக்க குணமும் இருக்க வேண்டும்!' என்று, எழுதி வைத்து விட்டு சென்று விட்டாரே...' என்று கூறி, கம்பால் அடித்து நொறுக்கி விட்டார்.

வலி தாங்க முடியாமல் அழுதபடியே, வீட்டிற்கு சென்றேன். வழியில், பள்ளி ஆய்வாளர், என்னை பார்த்து விட்டார்.

'ஏன் அழுகிறாய்...' என்றார். நடந்ததை கூறினேன். கையோடு பள்ளிக்கு அழைத்து சென்று, தலைமையாசிரியரைப் பார்தது, 'அம்மை போட்டிருந்த பையன், இன்றைக்குத்தான், பள்ளிக்கு வந்திருக்கிறான். ஏன் இப்படி அடித்தீர்...' என்று திட்டியதோடு, தலைமையாசிரியரை சஸ்பெண்டும் செய்து விட்டார்.

அந்த எட்டு வயதில் நடந்த நிகழ்வை, மறக்க முடியாமல், கடந்த, ஐந்து ஆண்டுகளாக, என் வீட்டுக்கு அருகே உள்ள, அரசு துவக்கப் பள்ளிக்கு சென்று, மூன்றாம் வகுப்பு படிக்கும், பத்து ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து, தீபாவளிக்கு, பத்து நாட்களுக்கு முன்பாக புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்; இது, ஒவ்வொரு ஆண்டும் தொடரும்!

- சி.மனுவேல்ராஜ், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us