PUBLISHED ON : நவ 09, 2019

வேலுாரைச் சேர்ந்தவள் நான்; விநாயகா முதலியார் பள்ளியில், 1968ல், 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும், திருமணம் நடந்தது.
குடும்ப அனுமதியுடன், வேலுார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கற்று தேர்ந்தேன். பெங்களூரு, பாபுஜி உயர்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன்.
அன்றாட கூலி தொழிலாளர்களின் குழந்தைகளே அதிகம் படித்தனர். குறிப்பாக, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தனர். அவர்களுக்கு, தமிழ் மொழி மட்டுமல்லாமல், இதர பாடங்களையும் கற்றுக் கொடுத்தேன்.
வருமானம் பற்றி கவலைப்படாமல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றேன்.
பின்னரும், என் கற்பித்தல் திறனை வீணாக்க விரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக கற்பிக்கிறேன். இந்த சேவைக்கு, என் குடும்பத்தினர் ஒத்துழைக்கின்றனர். வாழ்க்கை தேவைக்கு, கர்நாடக அரசு ஓய்வூதியம் தருகிறது.
ஓய்வு என்பது, அரசு பணிக்கு தானே தவிர, கல்வி பணிக்கு அல்ல என்பதை மனதில் கொண்டு சேவையாற்றி வருகிறேன்.
- மூ.பூங்கோதை, பெங்களூரு.
