PUBLISHED ON : மே 11, 2018

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய் - 2
தேங்காய்த் துருவல் - 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
நெய் - சிறிதளவு.
செய்முறை:
ஓட்சுடன், கால் கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் ஊற வைக்கவும்; பிறகு, மிக்சியில், நன்கு அரைத்து எடுத்து, பொடித்த ஏலக்காய், சர்க்கரையை சேர்க்கவும். வாழைப்பழத்தை நன்கு மசித்து, இவற்றுடன் சேர்த்து, பணியார மாவு பதத்திற்கு, கரைத்துக் கொள்ளவும்.
பணியார சட்டியில், சிறிது நெய் ஊற்றி, சூடானதும், மாவை ஊற்றி, வேக வைக்கவும். நன்றாக வெந்த பின், திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும், சூடாகப் பறிமாறலாம்.சத்துமிக்க மாலை நேர சிற்றுண்டி ரெடி!
- அ.மரிய ஆன்டோலினா, சென்னை.
