PUBLISHED ON : நவ 19, 2022

மாடிப்படி ஏறி, இறங்கினாலோ சிறிய சுமையை துாக்கினாலோ சோர்வு வருகிறதா... ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் அருந்தி வந்தால், உடல் பலம் பெற்று, சோர்வு அகலும்.
வயிற்று பொருமல், அஜீரணக் கோளாறு ஏற்பட்டால், 100 கிராம் ஓமத்தை, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி அருந்தினால் பிரச்னை நீங்கும்.
பசியைத் துாண்டி விடும். உண்ட உணவு எளிதில் ஜீரணமாக உதவும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் ஓமம். மாசடைந்த காற்று, நீர் இவற்றால் சுவாச பாதிப்பு, இருமல் ஏற்பட்டால் ஓமம் சிறந்த மருந்தாகி சீர்படுத்தும்.
* குடலிரைச்சல், இரைப்புக்கு ஓமம் சிறந்த மருந்து
* ஓமத்தை பொடித்து, உச்சந்தலையில் தேய்த்தால், ஜலதோஷம் குறையும்
* ஓமப்பொடியை துணியில் கட்டி முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
ஓமத்தில், 'சூப்' தயாரித்து குடித்தால், உடல் சுறுசுறுப்படையும். ஓமத்தில் ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் நலம் ஏற்படும். ஓமம் என்ற அருமருந்தை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்!
