
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
பதனீர் - 3 கப்
கருப்பட்டி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நீரில் ஊற வைத்த அரிசியை, பதனீரில் வேக வைக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்தவுடன், உப்பு சேர்க்கவும். பின், பொடியாக்கிய கருப்பட்டி சேர்த்துக் கிளறி நன்றாக வேகவிடவும். சுவையான, 'பதனீர் சாதம்' தயார்!
சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். உடலுக்கு வலிமை தரும். மிக எளிதாக தயாரிக்கலாம்!
- எஸ்.ஷாலினி பிரியா, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 87543 23517

