
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசின் பொக்கிஷம் என, லவுரி அருங்காட்சியகம், நோட்டர் டேம் கேத்தட்ரல், ஈபிள் டவரை கூறுவது வழக்கம்.
இவற்றில் லவுரி அருங்காட்சியகம் ஆக., 10, 1793ல் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் பேர் பார்வையாளராக வருகின்றனர். இதனுள், பிரபல ஓவியக்கலைஞர் டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் உள்ளது.
பாரீஸ் நகரில் மட்டும், 300 அருங்காட்சியகங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல, 1,142 பட கேலரிகளும் உள்ளன. கலை ரசிகர்களின் பொக்கிஷமாக விளக்குகிறது பாரீஸ்.
- ராஜிராதா