PUBLISHED ON : செப் 21, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
வாழைப்பழம் - 2
பனைவெல்ல துாள் - 1கப்
செய்முறை:
வேர்க்கடலையை, தண்ணீரில், ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின், கடலையை நன்கு கழுவி, வாழைப்பழம், பனைவெல்லம் சேர்த்து, நன்கு அரைக்கவும். அந்த கலவையை, ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
'குளு குளு' ஐஸ்கிரீம் தயார். சத்தானது; சுவையானது. சாப்பிடுற குட்டீஸ், மேலும் மேலும் கேட்பாங்க... கொடுக்க தயாராக இருங்க!
- மங்கையர்க்கரசி, திருநெல்வேலி.
