
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 2 கப்
அரிசி - 2 கப்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்தை ஊற வைத்து, உப்பு போட்டு, மாவாக அரைக்கவும். வேர்க்கடலையை வறுத்து தோலுரித்து கொரகொரப்பாக பொடியாக்கவும்.
வெல்லத்தை தண்ணீரில் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டவும். அதில், பொடியாக்கிய வேர்க்கடலை, ஏலக்காய் பொடி கலந்து, பூரணமாக்கி சிறு உருண்டைகளாக்கவும்.
அரைத்த மாவில், வேர்க்கடலை உருண்டையை தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவை மிக்க, 'வேர்க்கடலை போண்டா' தயார். மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். சிறுவர், சிறுமியர் மிகவும் விரும்புவர்.
- எஸ்.பிரேமாவதி, சென்னை.

