PUBLISHED ON : அக் 09, 2021

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
மிளகு, சீரகப் பொடி - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கடுகு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு, பெருங்காய பொடி, கொத்தமல்லி தழை - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில், இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு தாளிக்கவும். அதில் சாதம், மிளகு, சீரகப்பொடி, உப்பு, பெருங்காயத்துாள் கலந்து கிளறவும். பின் நறுக்கிய கொத்தமல்லி தழையை துாவவும். நலம் தரும், 'மிளகு, சீரகம் சாதம்!' தயார்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.
சளி, இருமல், தொண்டை வலி வராமல் தடுக்கும்!
- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.
