PUBLISHED ON : ஜூலை 02, 2010
* அமெரிக்காவில் மணப்பெண்ணின் உடை திருமணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் காணாமல் போய்விட்டது. மணப்பெண்ணும், தோழியும் பியூட்டி பார்லர்க்கு சென்ற போது காரில் இருந்த உடை காணாமல் போய்விட்டது.
* அரபு நாடுகளில் ஒட்டக பந்தயம் என்பது மிகவும் பிரபலமானது. சில சமயம் ஒட்டக பந்தயம் செய்யபவர் களின் உயிர் ஆபத்துகளில் முடிகிறது. எனவே, இப்போதெல்லாம் மனிதர் களுக்கு பதில் ரிமோட் கன்ரோல் ரோபட்டை உட்காரவைத்து போட்டிகள் நடத்துகின்றனர்.
* PETA என்ற விலங்குகள் பாதுகாப்பு நிறுவனம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் எழுதியது. ஏனென்றால் ஒபாமா ஒரு பேட்டியில் உரையாடிக் கொண்டிருந்த போது குறுக்கே புகுந்து தொல்லை கொடுத்த "ஈ'யை கொன்றுவிட்டார். எனவே, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு "ஈ'யை கொல்லாமல் பாது காப்பாக பிடித்து வெளியே விட்டிருக்க உதவும் ஒரு கருவியை அவருக்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்கர் கள்னா அமெரிக்கர்கள்தான்.
