PUBLISHED ON : நவ 06, 2021

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 100 கிராம்
வெந்தயம், கடுகு - தலா 1 தேக்கரண்டி
மஞ்சள், பெருங்காயத்துாள் - தலா 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காய்களை கழுவி, ஆவியில் வேக வைத்து விதைகளை நீக்கி மையாக அரைக்கவும். வெந்தயம், மிளகாயை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கவும்.
நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, பெருங்காயத்துாள் போட்டு, நெல்லிக்காய் விழுதைக் கொட்டவும். அதனுடன், மிளகாய், வெந்தயப்பொடி, மஞ்சள் துாள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். சுவைமிக்க, 'நெல்லிக்காய் தொக்கு!' தயார்.
இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கு பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம். சத்துகள் நிறைந்தது!
- பழனீஸ்வரி தினகரன், சென்னை.
தொடர்புக்கு: 95514 85194
