PUBLISHED ON : நவ 06, 2021

அமெரிக்காவில், 'நியூயார்க் வேர்ல்டு' என்ற நாளிதழுக்கு, குறுக்கெழுத்துப் புதிரை முதன்முதலாக வடிவமைத்து கொடுத்தார் ஆர்தர் வைனி. அதை, டிச.,13, 1913ல் அந்த நாளிதழ் வெளியிட்டது. பெரும் வரவேற்பை பெற்றதால், அந்த பகுதியை தொடர்ந்து வெளியிட்டது.
சிறு வயதில், வயல்வெளியில், தாத்தா ஆடிக் காட்டிய விளையாட்டு அடிப்படையில் குறுக்கெழுத்து புதிர் கட்டங்களை அமைத்திருந்தார் ஆர்தர். அதே பாணியில் புதிர் போட்டிக்கான கட்டங்களை தொடர்ந்து உருவாக்க ஆர்வம் காட்டினார்.
இதையடுத்து, குறுக்கெழுத்து புதிர் போட்டிப் புத்தகம் ஒன்று, 1928ல் வெளியானது. இப்புத்தகம், 50 ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. இதை, இரண்டு அமெரிக்கர்கள் இணைந்து உருவாக்கியிருந்தனர். தொடர்ந்து, 'டைம்ஸ் ஆப் லண்டன்' என்ற ஆங்கிலப் பத்திரிகையிலும் குறுக்கெழுத்து புதிர் போட்டி, 1930 முதல் வெளிவந்தது.
உலகம் முழுதும், குறுக்கெழுத்து புதிர் போட்டி இன்று வெளிவருகிறது.
