
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழம் - 1
சர்க்கரை - 150 கிராம்
பச்சை மிளகாய் - 10
வினிகர், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
அன்னாசிபழத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கவும். அதில், தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். வெந்து, மென்மையான பின், வினிகர், இரண்டாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, மீண்டும் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவை மிக்க, 'அன்னாசிபழ ஊறுகாய்' தயார். கண்ணாடி பாட்டிலில் அடைத்து, பக்க உணவாக பயன்படுத்தலாம்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: 63831 85379