தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிளாட்டினமே நீ இவ்வளவு உயர்ந்தவளா?

பிளாட்டினமே நீ இவ்வளவு உயர்ந்தவளா?

பிளாட்டினமே நீ இவ்வளவு உயர்ந்தவளா?


PUBLISHED ON : மார் 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயர்தட்டு மக்கள் இன்று தங்கள் செல்வ வளத்தை பெருமைப்படுத்துவதற்கு அதிகம் விரும்பும் உலோகம் 'பிளாட்டினம்!' அதைப்பற்றி தெரிஞ்சிக்கலாமா?

இது தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம்.

பிளாட்டினமும் தங்கத்தைப் போலவே தனி உலோகமாக பூமியிலிருந்து கிடைக்கிறது. தங்கத்தைப் போலவே பிளாட்டினத்தையும் மக்கள் நெடுங்காலத்துக்கு முன்னரே அறிந்திருக்கின்றனர்.

தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வெடார் நாட்டில் வசித்து வந்த பழங்குடி சிவப்பிந்திய மக்கள் நெடுங்காலத்திற்கு முன்னரே பிளாட்டினத்தால் ஆன அணிகலன்களை அணிந்து வந்தனர் என்று தெரிகிறது.

ரஷ்யாவில் யூரல் மலைத் தொடரில் தங்கத்துடன் சேர்ந்து பிளாட்டினம் பெரும் அளவு கிடைக்கிறது. பிளாட்டினத்துடன் தங்கம், செம்பு, நிக்கல் போன்ற உலோகங்களும் சேர்ந்து இருக்கும். பிளாட்டினத்துக்கென்று தனியாக சுரங்கங்கள் கிடையாது.

உலகில் கிடைக்கக்கூடிய மொத்த பிளாட்டினத்தில் பாதி அளவு கனடாவிலுள்ள ஓண்டாரியோ எனும் மாநிலத்தில் தான் கிடைக்கிறது.

பிளாட்டினத்தை எந்த அமிலமும் கரைத்துவிட முடியாது. எந்தவிதமான உஷ்ண நிலையிலும் இது பிரகாசமாகவே இருக்கும். பாதரசத்துக்கு கூட இதை கரைக்கும் ஆற்றல் கிடையாது. ஆனால், தங்கம் பாதரசத்தில் கரைந்துவிடும்.

பிளாட்டினம், தொழில்துறையில் பலவிதத்திலும் கிரியா ஊக்கியாக பயன்படுகிறது. கிரியா ஊக்கி என்பது ரசாயன கிரியையின் போது எந்த பொருள் மிக குறைந்த அளவில் இருந்த போதிலும், தான் எந்தவிதமான ரசாயன மாற்றமும் அடையாமல், ரசாயன கிரியை உண்டாக்கும் பொருள் கிரியா ஊக்கி என்று கூறுவர்.

கந்தக அமிலம் தயாரிப்பதற்கும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும், பிளாஸ்டிக் தயாரிப்பதற்கு பயன்படும் பார்மாடி ஹைடு எனும் ரசாயனப் பொருள் தயாரிப்பதற்கும் பிளாட்டினம் ஒரு கிரியா ஊக்கியாக பயன்படுகிறது.

வீரியம் கொண்ட எந்த அமிலத்தாலும் பிளாட்டினம் பாதிக்கப்படுவது இல்லை என்பதால் வீரியம் கொண்ட கந்தக அமிலத்தை செய்வதற்கு தேவையான பாத்திரங்கள் பிளாட்டினத்தால் செய்யப்படுகிறது. மேலும், பிளாட்டினத்தை உருகிய கண்ணாடியும் தாக்குவதில்லை என்பதால் பைபர் கிளாஸ் எனப்படும் நார் கண்ணாடி தயாரிப்பதற்கும், கண் கண்ணாடி தயாரிப்பதற்கும் பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

உயர் வெப்பத்தையும் பிளாட்டினம் தாங்குவதால் உஷ்ண மானிகள் தயாரிக்க உதவுகிறது. செயற்கை ரேயான் இழை தயாரிக்கும் போது ஒரு வகை பிசுபிசுப்பான கலவை மிகச் சிறிய துவாரங்களின் மூலமாக அழுத்தத்துடன் வெளியே செலுத்தப்படுகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக மெல்லிய துவாரத்தின் வழியாக ஒரே சீரான மெல்லிய இழைகள் கிடைக்கின்றன. எனவே, ரேயான் இழைகள் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள் பிளாட்டினத்தைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு துறைகளில் பிளாட்டினம் பயன்படுகிறது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us