PUBLISHED ON : நவ 18, 2023

இனிப்பு சுவை உடையது பிளம்ஸ் பழம். புத்துணர்ச்சி தரும், வைட்டமின் - சி சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நோய்த் தொற்றாமல் காக்கிறது. வைட்டமின் - ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்களும் மிகுந்த அளவில் உள்ளன.
பொட்டாஷியம், புளோரைடு, இரும்பு, தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த அழுத்தம், இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைக்கும். அல்சீமர் பாதிப்பு ஏற்படாமல் குறைப்பதில் பயன்படுகிறது.
இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்க, பிளம்ஸ் பழம் சாப்பிடலாம். இதன் சதையை நிழலில் உலர்த்தி, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். நோய் தாக்க, அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவு, நன்கு ஜீரணமானால் தான் அனைத்து சத்துகளும் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் உணவு உட்கொண்ட பின், பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்னைகள் நீங்கும்.
இந்த பழத்தை சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பேணலாம்.
