PUBLISHED ON : மார் 14, 2014
அ நிறம் | அளவு
மருத்துவத் தொழிலுக்கு பாம்பின் நஞ்சு மிக இன்றியமையாததாகும். இது பொன்னை விட மேன்மையானது. 140 கிராம் நஞ்சை எடுப்பதற்கு 20 ஆயிரம் பாம்புகள் தேவைப்படுகின்றன. பாம்பின் பல்லிலிருந்து நஞ்சை பிழிந்தெடுக்கின்றனர். ரஷ்யாவில் ஒரு கிராம் நஞ்சின் விலை 1400 ரூபிள். ஆனால், தங்கத்தின் விலையோ கிராமுக்கு மூன்று முதல் எட்டு ரூபிள் வரைதான். இதன் மூலம் பாம்பு நஞ்சின் மதிப்பு தெரியும். பாம்பிலிருந்து எடுக்கப்படும் நஞ்சு கால்சியம் குளோரைடில் வைக்கப்படுகிறது. அது நீரை <<உறிஞ்சியபின் படிகங்களாக மருந்தாலை களுக்கு அனுப்பப்படுகிறது. பாம்பு நஞ்சு தசை வலிகளையும், நரம்புக் கோளாறு களையும் குணப்படுத்துகிறது.
