PUBLISHED ON : மார் 14, 2014

அ நிறம் | அளவு
ஞாபக மறதி என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். சில விஷயங்களை மறந்து இருப்பதால் தான் நாம் சுகமாக வும், நிம்மதியாகவும் வாழ்வை நகர்த்த முடி கிறது. ஆனால், நினைவும் அவசியம் தானே?
ஒன்றைப் பார்த்து அல்லது கேட்டவுடன் 8 வினாடிகளுக்கு நம் நினைவில் நிற்கும். அதை மீண்டும், மீண்டும் எண்ணிப் பார்க்கும்போது தற்காலிகமாக நிற்கும். அது ஒரு சில நிமிடங் களுக்கு இருக்கும். பார்த்துக் கேட்டதை ஏற்கெனவே உள்ள நினைவுகளுடன் பொருத்தி வைத்துக் கொண்டால், அது நிரந்தரமாக நிலைத்து நிற்கலாம். இதற்குப் பயிற்சி செய்ய வேண்டும்.
மூளையில் நரம்பு செல்கள் வலைப் பின்னல் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நினைவுகள் பதிவாகின்றன. அந்த பின்னல் ஏற்படும் வரை மனப்பாடப் பயிற்சி செய்தல் அவசியம். இல்லையெனில், வேதி மாற்றங் களால் அழிக்கப்பட்டு விடும்.
