தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாதுளம் பழம் சாதம்!

மாதுளம் பழம் சாதம்!

மாதுளம் பழம் சாதம்!


PUBLISHED ON : நவ 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

மாதுளம் பழம் - 2

பெரிய வெங்காயம் - 1

அரிசி - 250 கிராம்

சீரகம் - 1 தேக்கரண்டி

பன்னீர் - 100 கிராம்

எண்ணெய், உப்பு, மிளகாய் துாள் - தேவையான அளவு.

செய்முறை:

மாதுளை முத்துக்களை, சாறாக்கி வடிகட்டவும்; இரண்டு தேக்கரண்டி எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போடவும். பின், சீரகம், மிளகாய் துாள் கலந்து நன்கு வதக்கவும். அதில், மாதுளை சாறை ஊற்றவும்; துண்டுகளாக்கிய பன்னீரையும் போடவும்.

நன்றாக கொதித்தவுடன், சுத்தம் செய்த அரிசி, தேவையான உப்பு போட்டு நன்கு கிளறவும். மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கவும்.

சூடான, 'மாதுளம்பழம் சாதம்' தயார்.சத்து மிக்கது, சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர். உடல் நலத்தை காக்கும்.

- மாயாபிரபு, பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us