தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்

இளஸ் மனஸ்

இளஸ் மனஸ்


PUBLISHED ON : நவ 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு மிக்க தாய் பிளாரன்சுக்கு...

எம்.எஸ்சி., கணிதம் முதல் ஆண்டு படிக்கும் மாணவன் நான். பள்ளியில் தமிழ் வழியில் படித்த எனக்கு, ஆங்கிலம் என்றாலே வெறுப்பு. அதனாலேயே கணிதப்பாட பிரிவை தேர்ந்தெடுத்தேன்.

ஆனால், என் கல்லுாரி வாழ்வு பெரும் சோகமே! கணித புத்தகங்கள் அனைத்தும், ஆங்கில வழியிலேயே இருந்ததால், பெரும் சிக்கலுக்கு உள்ளானேன்.

பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற எனக்கு, சுயமாக கற்று அறிய முடியாத நிலை நரக வேதனை அளித்தது.

பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில், 57 சதவீத மதிப்பெண்களுடன், பி.எஸ்சி., பட்டம் பெற்றேன்; ஆசிரியர் கனவு உந்தி தள்ள, எம்.எஸ்சி., பயின்று வருகிறேன்.

பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், தமிழ் வழியில் கிடைப்பதே இல்லை; இதனால், என் கணித ஆற்றல் குறைந்து வருகிறது. ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறேன்.

தமிழ் வழியில் எழுதப்பட்ட கணித நுால்களையும், டி.ஆர்.பி., தேர்வுக்கு தேவையான தமிழ் வழி நுால்களையும் பரிந்துரை செய்யுங்கள் அம்மா... என் வாழ்வை தாங்கள் தான் கரை சேர்க்க வேண்டும்

.

அன்பு மகனுக்கு...

கணிதம், விஞ்ஞானத்தின் ராணி; அறிஞர் ஆர்க்கிமிடிஸ் கணிதத்தின் தந்தை என போற்றப்படுகிறார்; பூஜ்ஜியத்தை கி.பி., 4ம் நுாற்றாண்டில், 'மாயன்ஸ்' நாகரிக வாசிகள் கண்டுபிடித்தனர்.

இந்த பிரபஞ்சமே கணித கோட்பாட்டின் அடிப்படையில் தான் இயங்குகிறது.

இசை, நுண்கலை, விளையாட்டு உட்பட எல்லா கட்டமைப்பிலும், ஒளிந்திருக்கிறது கணிதம்.

இது அப்பழுக்கில்லாத, தனித்துவமான உண்மை; அலைபேசி, கட்டடக்கலை, பணம், பொறியியலில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

உனக்கும், எனக்கும், ஏன் கடவுளுக்கும்... கணித அடிப்படையில் தான் பெயர் இருக்கும் என, கணித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

கிரேக்க வார்த்தை, 'மேத்திமா' என்பதிலிருந்து தான் கணிதப்பெயர் தோன்றியது. அட்சர கணிதம், வடிவியல், முக்கோணவியல், நுண்கணிதம், புள்ளி விபரவியல், நிகழ்தகவு எனும் பிரிவுகள் கணிதத்தில் உள்ளன.

சிரமமான பாடங்கள், அட்சர கணித வடிவியலும், அட்சர கணித எண் விதிகளும், எர்கோடிக் விதிகளும், எண் கணித சேர்க்கைகளும் தான்.

மகனே... கணிதம் மொழி சார்ந்த பாடமல்ல; எந்த மொழியில் படித்தாலும் அடிப்படை ஒன்று தான். மழுப்பலுக்கும் கதை விடுதலுக்கும், கணிதத்தில் வேலையே இல்லை.

புரிந்து படிக்க கணித கலைக்களஞ்சியம், படங்களுடன் கூடிய கணித அகராதியை படி. ஆக்ஸ்போர்டு கணித அகராதி, இணையதளத்தில் கிடைக்கிறது. விலை, 320 ரூபாய் தான். பி.டி.எப்., வடிவிலும் கிடைக்கிறது.

தேர்வுகள் எழுத கீழ்க்கண்ட கைடுகள் உதவும் மகனே...

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்காக, சுரா பப்ளிகேஷன்ஸ் கணிதவியல் தமிழ் வழிகாட்டி நுாலை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் வீ.வீ.கே சுப்புராசு. இதன் விலை, 324 ரூபாய். 'பிளிப்காட்' தளத்தில் கிடைக்கும். 'குரூப் ஒன்' தேர்வில் தேர்ச்சி பெற, இந்த கைடு மிகவும் உதவும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காக, சக்தி பப்ளிகேஷன்ஸ், ஒரு தமிழ் கைடு வெளியிட்டுள்ளது; விலை 250 ரூபாய்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வுக்காக, சக்தி பப்ளிகேஷன்ஸ் ஒரு ஆங்கில கைடு வெளியிட்டுள்ளது. அதன் விலை, 375 ரூபாய்.

தமிழ் அகராதி வைத்து புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடிக் கொள்ளலாம். கணிதத்தில் தர்க்க ரீதியாக பகுப்பாய்வு திறனுடன், சிக்கல் தீர்க்கும் திறமையை வளர்த்துக் கொள்.

கணிதத்தின் மீது காதல் இருந்தால், மொழி சார்ந்த தடைகளை எளிதில் கடந்து போவாய். மிகச்சிறந்த கணித ஆசிரியராக திகழ வாழ்த்துகள்!

- பிரியங்களுடன், பிளாரான்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us