
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோலானம் டியூபரோசம் என்ற செடியின் வேரில் விளைகிறது, உருளைக்கிழங்கு. நெல், கோதுமை, மக்காசோளத்துக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தென் அமெரிக்க நாடான பெரு இதன் தாயகம்.
உருளைக்கிழங்கில் காரப்பொருள் அதிகம் இருக்கிறது. உடலில் தங்கும் புளித்த அமிலங்களை சமன்படுத்தி, உடல் ஆரோக்கியம் பேணும். யூரிக் அமிலத்தை வெளியேற்றும். ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற நோய்களை குணப்படுத்தும்.
அவித்த உருளைக்கிழங்கை தோலுடன் மசித்து சாப்பிடலாம். வயிறு, குடல், இரைப்பை கோளாறுகளை நீக்கும். தோலில் படியும் அழுக்கு, சுருக்கங்களை நீக்கும். அடிக்கடி சாப்பிட்டால் உடல் பருமன் குறைபாடு ஏற்படும். எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

