
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 12
பூண்டு - 7 பல்
உளுந்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய், உப்பு, கடுகு, கருவேப்பிலை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளு தானியத்தை சுத்தம் செய்து நன்றாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தனியாக வறுக்கவும். இவை ஆறியதும், உப்பு, கொள்ளுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை தாளித்து, அரைத்த கலவையுடன் கலக்கவும். சுவை மிக்க, 'கொள்ளு துவையல்' தயார். சத்து மிக்கது. சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். சிறுவர், சிறுமியர் விரும்புவர்.
- வி.செல்வா, அருப்புக்கோட்டை.
தொடர்புக்கு: 99524 54819

