PUBLISHED ON : அக் 31, 2020

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.
நேச நாட்டு தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் முக்கிய பிரச்னைகள் பற்றி ஆலோசிக்க, ஐரோப்பிய நாடான உக்ரேன், யால்டா நகரில் கூடியிருந்தனர்.
அப்போது, சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது உக்ரேன்.
அன்று, காலை உணவை முடித்ததும் மூவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
திடீரென, 'நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் தோன்றிய கடவுள், என்னை உலகின் பிரதமராக ஆக்குவதாக கூறி சென்றார்...' என்றார் சர்ச்சில்.
சற்று சுதாகரித்தபடி, 'நானும், ஒரு கனவு கண்டேன்; என் முன் தோன்றிய கடவுள், உலகின் ஜனாதிபதியாக என்னை ஆக்குவதாக வாக்களித்தார்... ' என்றார் ரூஸ்வெல்ட்.
அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், 'நேற்றிரவு, உங்கள் இருவருக்கும் அப்படி வாக்குறுதி அளித்ததாக எனக்கு நினைவில்லையே...' என கூற, இருவரும் அதிர்ந்தனர்.
