PUBLISHED ON : அக் 31, 2020

அ நிறம் | அளவு
என் வயது, 85; ஆயிரம் பிறை கண்ட சிறுவர்மலர் வாசகி. அந்த காலத்தில், 5ம் வகுப்பு வரை படித்தேன். புத்தகங்கள் வாசிப்பதில் நல்ல ஆர்வம் உண்டு.
சிறுவர்மலர் இதழைக் காணும்போது, 10 வயது சிறுமியாக மாறி விடுகிறேன். எப்போதிலிருந்து, இந்த பரிச்சயம் ஏற்பட்டது என்ற ஞாபகம் இல்லை.
என் பேரக்குழந்தைகளின் படிப்பு வேகத்திற்கு ஈடு கொடுக்க வைக்கிறது, சிறுவர்மலர்.
துாங்க போகும் முன், பேரன், பேத்தியருக்கு படித்த கதைகளை சுவாரசியமாக கூறுவேன். அவர்கள் மகிழ்வதை ரசிப்பேன்.
'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்களை படிக்கும் போது, சிறுவயது தோழியர், ஆசிரியைகள் நினைவில் வருவர். புத்துணர்வு பெறுவேன்.
தலைமுறைகள் சங்கமிக்கும் ஒரே இடம் சிறுவர்மலர் மட்டும் தான்!
- வ.சந்திரா, மதுரை.
தொடர்புக்கு: 90039 21205
