தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சாஷ்டாங்கமாக விழுந்து...

சாஷ்டாங்கமாக விழுந்து...

சாஷ்டாங்கமாக விழுந்து...


PUBLISHED ON : ஜூன் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1958ல், சென்னை, புதுக் கல்லுாரியில் படித்த போது, நிகழ்ந்த சம்பவம்; மலரும் நினைவு இது! என் வயது, 81.

தமிழ் வகுப்பில், எந்த மாணவனும், ஆங்கில வார்த்தையை உச்சரிக்காமல், தமிழில் தான் பேச வேண்டும்;

பேராசிரியர் மிகவும் கண்டிப்பான மனிதர். பாடம் நடத்திகொண்டிருந்த போது, சங்கர் என்ற மாணவன், 15 நிமிடங்கள் தாமதமாக வந்து, அவருடைய அனுமதிக்காக காத்திருந்தான்.

'என் அன்புக்குரிய மாணவனே... தாமதித்து வந்ததன் காரணம் யாது...' என்று வினவினார்.

அதற்கு சங்கர், 'பெருமதிப்பிற்குரிய பேராசிரியரே... நான் பயணித்த பேருந்தில், பழுது ஏற்பட்டு, வழியில் நின்று விட்டதால், தாமதித்து வர நேரிட்டது. எதிர்பாராத இந்த நிகழ்வுக்கு, மனம் இறங்கி மன்னித்தருள வேண்டும்...' என்று கூறியபடியே, 'தடா'லென்று தரையில் விழுந்து, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.

எழுந்ததே வகுப்பில் ஆரவாரம்! இந்த சங்கர் தான், பிற்காலத்தில் பிரபலமான, ஜெய்சங்கர் என்ற, சினிமா நடிகர்!

- டி.ஆர்.சங்கரன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us