sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பொது ஒழுக்கம்!

/

பொது ஒழுக்கம்!

பொது ஒழுக்கம்!

பொது ஒழுக்கம்!


PUBLISHED ON : ஆக 07, 2021

Google News

PUBLISHED ON : ஆக 07, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர், எம்.பி.பி.எஸ்., செந்தில்குமார் நடுநிலைப் பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி!

தலைமை ஆசிரியர் ஆசிர்வாதம் நல்ல உயரம்; அதற்கேற்ற பருமன்; அவரை கண்டாலே மாணவர்கள் அஞ்சுவர். மிகவும் கண்டிப்புடன் இருப்பார்; ஒழுக்கத்திற்கு முன்னுரிமை தருவார்.

ஒரு நாள், இரண்டாவது பாடவேளையில் விளையாட்டு ஆசிரியர் வராததால், தலைமை ஆசிரியரே வந்தார். விளையாட்டு மைதானத்திற்கு எங்களை அனுப்பி கவனித்தார்.

மைதான ஓரத்தில் சிலர் சிறுநீர் கழிப்பதை கண்டு, அழைத்து விசாரித்தார்; அனைவரும் அமைதி காத்தோம்.

ஐந்து பேரை, பெயர் குறிப்பிட்டு அழைத்தார்; அதில் நானும் இருந்தேன். கன்னத்தில், 'பளார்' என அறைந்து அறிவுரைத்தார். பொது இடங்களில் அசுத்தம் செய்வது தவறு என்பதை உணர்ந்தேன். எச்சரிக்கையுடன் வாழ்வில் அதை தவறாது கடைப்பிடித்து வருகிறேன்.

இப்போது என் வயது 69; பொது ஒழுக்கத்தை கற்றுத்தந்த அந்த தலைமை ஆசிரியரை இன்றும் மனதில் கொண்டுள்ளேன்.

- ஆர்.சுப்பு, சிவகாசி.






      Dinamalar
      Follow us