PUBLISHED ON : ஆக 27, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் துண்டு - 1
மாங்காய் - 1
தேங்காய் துருவல் - 0.5 கப்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள் துாள், சீரகம், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பூசணிக்காய், மாங்காய், பச்சை மிளகாயை, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் துாள் போட்டு, தண்ணீர் ஊற்றி அவிக்கவும்.
நன்றாக வெந்ததும் மசிக்கவும். அதில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பின், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும். சுவையான, 'பூசணிக்காய் பச்சடி' தயார்!
சாதத்துடன் பக்க உணவாக கொள்ளலாம்; அனைத்து வயதினரும் விரும்பி சுவைப்பர்.
- ஆர்.பிரேமா, கடலுார்.
