PUBLISHED ON : நவ 30, 2019

மழையில்லாமல், மண்ணில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது; பண்டை காலத்தில், மழையை தெய்வமாக கருதி வழிப்பட்டனர்.
ஆறு, குளம், குட்டைகளிலிருந்து நீர் ஆவியாகி, மேகமாக மாறுகிறது; பின், மழையாக மண்ணில் விழுகிறது. இந்நீர், மனிதன், விலங்கு, பறவை என உயிரினங்களுக்கு பல வகையிலும் பயன்படுகிறது.
மழை நீரை சேமிப்பது அத்தியாவசியம் ஆகும்; மழைநீரை சேகரித்து, குடிநீருக்கும், கால்நடைகளுக்கும், பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பயன்படுத்தலாம்.
வீட்டிலேயே மழைநீரை சேமிக்கலாம். மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம், தரையில் தொட்டி கட்டி, ஆற்று மணலையும், சரளைக்கற்களையும் பரப்பி சேமிக்கலாம்.
மழைநீரை சேமிப்பதால், மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படும்.
நீரின் கார, அமில தன்மை சமனாகும்; நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல், காக்கும், போக்குவரத்து தடையின்றி நடைபெற உதவும்.
கண்மணிகளே... நீங்களும் மழைநீரை சேமித்து, வளம் பெறுங்கள்!
