sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

படிங்க.. படிங்க....!

/

படிங்க.. படிங்க....!

படிங்க.. படிங்க....!

படிங்க.. படிங்க....!


PUBLISHED ON : நவ 29, 2013

Google News

PUBLISHED ON : நவ 29, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடியில் மளிகைக் கடை வைத்திருந்தார் ராஜா. சிறந்த பக்திமான். நாள்தோறும் காலையும், மாலை யும் கோவிலுக்குப் போவார். ராஜா மளிகைக் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், அவர் கடைக்குச் சென்றால் எல்லாப் பொருட்களும் எளிதில் கிடைக்கும். தரமும் நன்றாக இருக்கும்.

ஒரு சமயம் ராஜா கடையிலிருந்து கோவிலுக்குச் சென்ற போது... ஒரு பெரியவர் கோவிலுக்கு அருகில் மயங்கிக் கிடந்தார். அவரைத் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார் ராஜா.

''ஐயா... நீங்க எந்த ஊர்... ஏன் இப்படி சோர்வாக மயங்கி கீழே விழுந்து இருக்கிறீர் கள்?'' என்று கேட்டார் ராஜா.

''ஐயா... நான் அருகில் உள்ள நகரத்தைச் சேர்ந்தவன். நான் நகைக்கடை வைத்திருக் கிறேன். எல்லாரையும் எளிதில் நம்பி விடுவேன். அதனால் தான் ஏமாந்தேன். என் பிள்ளைகள் கூட என்னை விட்டுப் பிரிந்து விட்டனர். இப்போது எனக்கென்று சொந்தம் யாரு மில்லை...'' என்று அழுதார்.

''ஐயா கவலைப் படாதீர்கள்... எப்போதும் எல்லா வற்றையும், எல்லாரையும் எளிதில் நம்பவும் கூடாது. நம்பாமல் இருக்கவும் கூடாது. அப்படிப்பட்ட உலகம் இது. நாம் தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

''ஐயா சரியாச் சொன்னீங்க... உங்களால் மட்டும் எப்படி இப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது?'' என்று கேட்டார்.

''அதற்குக் காரணம் என் மகன் சொல்வதைத் தான் நான் கேட்கிறேன்,'' என்று சொன்னார் ராஜா.

''ஐயா... நீங்களோ பெரியவர்... அப்படி இருக்கும் போது சிறியவ னான உங்கள் மகன் சொல்வதைக் கேட்டு நடப்பது எப்படிச் சரியாக இருக்கும்?'' என்று கேட்டார்.

''ஐயா... என் மகன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். அவன் பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் மட்டும் அல்ல, மாநிலத்திலேயே என் மகன் தான் முதல் மதிப்பெண் பெற்றான். பள்ளியின் மாணவத் தலைவனும் என் மகன்தான். தினந்தோறும் ஒரு மணி நேரம் நூல் நிலையம் சென்று நாளிதழ்களைப் படிப்பான்.

''வரும்போது நூல் நிலையத்தில் இருந்து எனக்கு நல்ல நூல்களை வாங்கி வருவான். தினந்தோறும் அந்த நூல்களை நானும் படிப் பேன். இன்று நாட்டு நடப்பு அனைத்தும் எனக்குத் தெரியும். மேலும், நல்லவர்கள் யார்? நல்ல வர்கள் அல்லாதவர்கள் யார்? என்பதைக் கூடத் தெரிந்து கொண்டேன். நான் சிறந்த செல்வந்தவன் ஆகக் காரணம் என் மகன் உறுப்பினராக இருக்கும் நூல் நிலையம் தான்,'' என்று கூறினார்.

''ஒருவன் தினந்தோறும் நூல்நிலையம் சென்றால் செல்வந்தன் ஆக முடியுமா?'' என்று கேட்டார் பெரியவர்.

''ஐயா... நிச்சயம் முடியும்... முதலில் நீங்கள் நூல் நிலையம் சென்று நல்ல நூல் களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். நூல்களில் எழுதியுள்ள நல்ல கருத்துக் களைப் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

''உதாரணமாக... பருத்திச் செடியில் இருந்து பஞ்சு கிடைக்கிறது. பஞ்சு வெண்மையாக இருக்கும். ஆனால், வெண்மையான பஞ்சைச் சுற்றி சில கறுப்பு நிறத் துகள்கள் இருக்கும். முதலில் எடுத்து நூல் நூற்கலாம். ஆனால், நூல் நூற்கும் போது சின்ன சின்னக் கோணல் வெளியில் தெரியும். வெளியே தெரியும் கோணல்களை நீக்கினால்தான் நல்ல நூல் கிடைக்கும். அது போல மனிதனின் மனதில் ஏற்படும் கோணல்களை, வளைவுகளை நூல் நிலையத்தால் வழங்கும் நூல்களால்தான் சரிப்படுத்த முடியும். ஆகவே, தினந்தோறும் நல்ல நூல்களைத்தான் நாம் படிக்க வேண்டும்.

''ஒவ்வொரு நாளும்... வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள நல்ல நூல்களை நாம் படித்தால் படிப்பாளியும் ஆகலாம், படைப்பாளியும் ஆகலாம். நமது நூல் நிலையங்கள் வழங்காத பயனை வேறு எதுவும் வழங்கிட இயலாது. அடக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நற்பண்புகள், வறுமையைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை, பொறுமை முதலிய மனப்பயிற் சிக்கு நமது நூல் நிலையங்களே வழி காட்டும்,'' என்றார் ராஜா.

''ஐயா... என் தவறை நான் உணர்கிறேன். படிக்க வேண்டிய நேரத்தில் சரியாகப் படிக்காததால், நான் நல்ல நூல்களையும் படிக்கவில்லை. எனக்கு வாழ்க்கையில் நல்ல நண்பர்களும் அமையவில்லை. இப்போது என் தவறை நான் உணருகிறேன். தவறை உணர்ந்த நான் இப்போது என்ன செய்ய முடியும்,'' என்று கேட்டார் பெரியவர்.

''ஐயா... கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு வேலை வாய்ப்புத் தருகிறேன். நீங்கள் என் கடையில் வந்து விற்பனைப் பிரிவில் பணி புரியலாம். என்னுடன் தங்கி இருக்கலாம். படிப்பதற்கு வயது வரம்பு இல்லை. எதற்கும் கவலைப்படாதீர்கள். வாருங்கள் உங்களுக்கு நான் உதவி செய்கிறேன்,'' என்றார் ராஜா.

''ஐயா... நூல் நிலையம் எங்கே இருக் கிறது? என்னை முதலில் அந்த நூல் நிலையத்தில் உறுப்பினர் ஆக்க முடியுமா?'' என்று கேட்டார்.

''ஐயா... வாங்க நாம் இருவரும் நூல் நிலையம் போகலாம். இன்று முதல் நீங்கள் நூல் நிலையத்தின் நிரந்தர உறுப்பினர். சரிதானே...'' என்று சொன்னதும்.

பெரியவர் முகத்தில் பிரகாசமான ஒளி தென்பட்டது.

குட்டீஸ்... பள்ளியில் லைப்ரரி வகுப்பில் தரும் புத்தகங்களை படித்து பயன்பெறுங்கள் சரியா!

***






      Dinamalar
      Follow us