தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சீர்தூக்கிய செம்மல்!

சீர்தூக்கிய செம்மல்!

சீர்தூக்கிய செம்மல்!


PUBLISHED ON : நவ 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, வி.ஆர்.டி.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2014ல், 12ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு...

சிறு வயதிலிருந்தே, முதல் மதிப்பெண் பெறுவதை குறிக்கோளாக கொண்டிருந்தேன். என்னை ஊக்குவித்தவர் ஆசிரியை ஷீலா. பள்ளி அளவில், 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன்.

மதிப்பெண் பற்றிய பயம், 12ம் வகுப்பில் அதிகமானது; தவறான முடிவு எடுக்க துாண்டியது. மன உளைச்சலால் அவதிப்பட்ட நிலையில், 'உனக்கு ஆதரவாக இருக்கிறேன்; கவனத்தை சிதற விடாமல் படி; பெண் பிள்ளைகளுக்கு கல்வி அவசியம்...' என்று, அந்த ஆசிரியை தெம்பூட்டினார்.

அவரது அறிவுரையை ஏற்று, 12ம் வகுப்புத் தேர்விலும், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன்.

கல்லுாரியில், உளவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தேன். ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில், முதுகலை படித்துக் கொண்டிருக்கிறேன். தேசிய அளவிலான விரிவுரையாளர் தகுதி தேர்விலும் வென்றுள்ளேன்.

தடம் புரள இருந்த என் வாழ்வை சீர்துாக்கி, செம்மையாக்கிய அந்த ஆசிரியைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவரது போதனையை பின்பற்றி, வாழ்வில் உயர முயல்கிறேன்.

- பி.காவ்யா, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us