தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சமயோசிதம்!

சமயோசிதம்!

சமயோசிதம்!


PUBLISHED ON : டிச 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் மாவட்டம், விட்டலுார் அரசு பள்ளியில், 1959ல், 3ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!

அன்று தமிழ் பாட வகுப்பில் ஆசிரியர் பட்டாபி, 'சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே...' என்ற, 'வெற்றி வேற்கை' செய்யுளை எடுத்து கூறி, 'குழந்தைகள் அறியாமல் செய்யும் தவறுகளை மன்னித்து, அன்போடு அறிவுரைக்க வேண்டுமே தவிர, தண்டிக்க கூடாது...' என விளக்கினார்.

அப்போது தலைமை ஆசிரியரின் மகள் திலகா தன், 2 வயது தம்பியுடன் அங்கு வந்தாள். ஆசிரியரிடம், 'பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, விரைவில் திரும்புகிறேன். அதுவரை இங்கு இருக்கட்டும்...' என, சிறுவனை ஒப்படைத்து சென்றாள்.

சிறிது நேரத்தில், சிறுவன் கையிலிருந்த கிண்ணம் தவறி விழுந்தது. உணவுப் பொருட்கள் சிதறியதால் அழத் துவங்கினான். சிதறியதை சேகரித்து, துாசு நீக்கி கிண்ணத்தில் போட்டேன். பின், 'சிறியோர் சிந்தின சிறுகடலையெல்லாம், பெரியோராயின் பொறுக்குவது கடனே...' என்று வேடிக்கையாக ஆசிரியரிடம் கூறினேன்.

குபீரென சிரித்தபடி, 'சமயோசிதமாக சிந்திக்கும் திறன் உன்னிடம் உள்ளது; முயற்சி எடுத்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். தொடர்ந்து படி; வீட்டில் முடங்கி விடாதே...' என அறிவுரைத்தார்.

எங்கள் பகுதி கிராமங்களில், 5ம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்ல சிறுமியருக்கு அந்த காலத்தில் அனுமதியில்லை. தந்தையிடம் பிடிவாதமாக வாதாடி, ஊர் கட்டுப்பாடு, தடைகளை உடைத்து, பள்ளிக் கல்வியை சிறப்பாக முடித்தேன். தொடர்ந்து, சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி, அரசு பணியில் சேர்ந்தேன். அந்த பகுதியில் இருந்து அரசு பணியில் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றேன்.

என் வயது; 71; அரசு பணியில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். என் திறனை ஊக்குவித்து வாழ்வில் நம்பிக்கை ஊட்டி முன்னேற்றத்துக்கு வித்திட்ட அந்த ஆசிரியரை வணங்குகிறேன்.

- ஆர்.ராஜலட்சுமி, சென்னை.

தொடர்புக்கு: 94458 03408


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us