தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குருவுக்கு மரியாதை!

குருவுக்கு மரியாதை!

குருவுக்கு மரியாதை!


PUBLISHED ON : ஆக 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதாவும், பிதாவும் நாம் பிறக்க காரணமானவர்கள். குரு என்ற ஆசிரியர் பகுத்தறிய கற்றுத் தருபவர். வாழ்வில் உன்னத நிலையை அடைய, தெய்வம் உதவும். மாதாவும், பிதாவும் நம்மை குருவிடம் ஒப்படைக்க, அவர் தெய்வத்திடம் சேர்ப்பார் என்பதே, வாழ்க்கை தத்துவம். ஆசிரியர் தினத்தையொட்டி, குருவுக்கு மரியாதை செய்வோம்.

கால்குலேட்டரை மிஞ்சும் வகையில், இந்திய கணித அறிவைக் கையாண்டு, ஆசியா கண்டம், சீனாவை கலக்கி வருகிறார், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஐசக் தேவகுமார்.

சீனாவில் கணித ஆசிரியராக பணியாற்றும் இவர், சிறந்த ஆசிரியருக்கான சீன விருதை, இரண்டு முறை பெற்றுள்ளார்.

ஆர்வம் மிகுதியால், வித்தியாசமான வழிமுறைகளில் கணக்குகளுக்கு விடை தேட முயன்றார்.

இந்திய பாரம்பரிய முறை கணிதத்தைக் கையாண்டு, புதிர்களுக்கு எளிமையான தீர்வுகள் கண்டார். இது, அவரை சாதனையாளர் பட்டியலில் இடம்பிடிக்க வைத்துள்ளது.

அவர் கூறியதாவது: கணிதத்தில் முதுநிலை பட்டம் பெற்று, தமிழக பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன்.

இந்திய பாரம்பரிய முறை கணிதத்தில் கவனம் செலுத்தினேன். இந்த முறையில் கணித புதிர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். எப்படிப்பட்ட சிக்கலான கணக்கு புதிர்களுக்கும், விடை காண முடியும். இதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வந்தேன்.

அப்போது தான், சீனாவில் அரசு பள்ளிக்கு, கணித ஆசிரியர் தேவை என்ற விளம்பரம் கண்ணில் பட்டது. எனக்கு ஆங்கில மொழி தான் தெரியும்; சீனமொழி தெரியாது. நம்பிக்கையுடன் அந்த பணிக்கு விண்ணப்பித்தேன்; என்னை தேர்வு செய்தனர்.

சீனாவில் சிஸ்வான் மாகாணம், சென்ங்கு பகுதியில், 'ஷிஷி' என்ற அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன். இந்திய பாரம்பரிய முறையில், கணக்குகளுக்கு விடை காண கற்றுக் கொடுத்தேன்.

இந்த முறையை, குறும்புமிக்க மாணவர்களும் ஆர்வமுடன் கற்றனர். இதனால், அனைவரும் விரும்பும் ஆசிரியரானேன்.

என் திறமையைக் கண்ட சீன அரசு கல்விக்குழு, சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை, இரண்டு முறை வழங்கி கவுரவித்தது.

இந்தியாவில், மருத்துவரை கடவுளாக பார்ப்பது போல, ஆசிரியர்களையும், கடவுளாக பார்க்கின்றனர் சீனர்கள்.

இந்திய கல்வி நிறுவனங்களில், பாரம்பரிய முறையில் கணிதம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம். இந்த முறையை, சீன மாணவர்களே ஆர்வத்துடன் கற்கும் போது, இந்திய மாணவர்களும் சாதிக்க முடியும்.

இவ்வாறு, ஆசிரியர் ஐசக் தேவகுமார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us