தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திருத்திய கடிந்துரை!

திருத்திய கடிந்துரை!

திருத்திய கடிந்துரை!


PUBLISHED ON : ஆக 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி மாவட்டம், இ.ஆர்.உயர்நிலைப் பள்ளியில், 1966ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்துக் கொண்டிருந்தேன். என் தந்தையே தமிழாசிரியர்; அவரை, வித்வான் துரைசாமி என்று அன்புடன் அழைப்பர்.

ஒரு நாள், தமிழ் வகுப்பில் ஒருவன் துாங்கிக் கொண்டிருந்தான். அதை பார்த்ததும், சிரித்து விட்டேன். இதைக் கண்ட அப்பா, என்னை கடிந்ததுடன், வீட்டில் செய்யும் சிறு தவறுகளை எல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார். சக மாணவர்கள், என்னை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தனர்; கூனிக்குறுகிப் போனேன்.

பாடவேளை முடிந்ததும், தனியாக அழுது கொண்டிருந்தேன்; ஒருவன் மட்டும், அப்பாவின் கண்டிப்பை உயர்வாக பேசி தேற்றினான்; கோபம் தணிந்தது.

கவனத்துடன் படித்து, பி.காம்., பட்டம் பெற்றேன். கனரா வங்கியில் பணியில் சேர்ந்தேன்; பதவி உயர்வுகளுடன் அதிகாரியாக ஓய்வு பெற்றேன். கடைசிவரை, பெற்றோரை, என் அன்பு பாதுகாப்பில் வைத்துக் கொண்டேன்.

தற்போது, என் வயது, 69; ஆசிரியர் பணியின் போது அப்பா, கடிந்து திருத்தியதால், கடமைகளை சரிவரச் செய்யும் பக்குவம் வந்தது. அவரை மனதில் கொண்டுள்ளேன்.

- டி.நாகராஜன், பெங்களூரு.

தொடர்புக்கு: 99400 47855

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us